புதிய நகர பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதிய நகர பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
X
திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் 02 புதிய நகர பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் திருப்பத்தூரிலிருந்து திருமயம் மற்றும் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி ஆகிய வழித்தடங்களுக்கான புதிய நகர பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும்போது தமிழ்நாடு முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாமும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாகுபாடின்றி கிடைக்கப்பெறச் செய்யும் வகையிலும், குறிப்பாக, அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு, அனைத்து வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு வணிக ரீதியான போக்குவரத்திற்கும், சராசரியான போக்குவரத்து பயன்பாட்டிற்கும் பயனுள்ள வகையில், போக்குவரத்து வசதிகளுக்கென புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை மையாமாக கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கான புதிய வழித்தடங்கள் மற்றும் புதிய பேருந்து வசதிகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூரிலிருந்து திருமயம் மற்றும் திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி வழித்தடமானது முக்கிய வழித்தடமாக விளங்கி வருகிறது. இப்பகுதிக்கு முன்னதாக, பேருந்து வசதிகள் போதுமானதாக இருந்து வந்தது. தற்போது, இதனை மேம்படுத்திடும் நோக்கில், வழித்தடம் TPR008-ன் கீழ் காலை 06.40 மணிக்கு திருப்பத்தூரிலிருந்து திருமயம் வரையிலான பேருந்தினை, நெடுமரம், சிறுகூடல்பட்டி, கீழச்சிவல்பட்டி, காட்டுபாவா பள்ளிவாசல் ஆகிய வழிகளிலும், இரவு 08.15 மணிக்கு திருமயத்திலிருந்து திருப்பத்தூர் வரையில் மேற்கண்ட ஊர்களின் வழியாகவும், வழித்தடம் TPR003-ன் கீழ் காலை 06.20 மணிக்கு திருப்பத்தூரிலிருந்து காரைக்குடி வரையிலான பேருந்தினை, தென்கரை, வைரவன்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பாதரக்குடி , கோவிலூர் ஆகிய வழிகளிலும், இரவு 08.05 மணிக்கு காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் வரையில் மேற்கண்ட ஊர்களின் வழியாகவும் இயக்கிடும் பொருட்டு, இன்றையதினம் திருப்பத்தூரிலிருந்து பேருந்து நிலையத்தில் மேற்கண்ட வழித்தடங்களுக்கான 02 புதிய நகர பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்க துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நல்லாட்சியில், இதுபோன்று, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அறிந்து, அத்திட்டங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட்டு, உரிய திட்டப்பயன்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கந்தசாமி, துணை மேலளார் (வணிகம்) நாகராஜன், கிளை மேலாளர் தனபால், திருப்பத்தூர் மற்றும் போக்குவரத்துத்துறையை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story