ஆண்டிபட்டி அருகே நடுக்கோட்டையில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

X

கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே நடுக்கோட்டையில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம். ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் பழமையான முத்தாலம்மன் , விநாயகர் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் - சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் நடுக்கோட்டை முத்தாலம்மன், விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது . இதற்காக முன்னதாக மூன்று கால யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்று, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி , பின்னர் பூர்ணாகுதி நிகழ்ச்சி நடைபெற்று ,108 புண்ணிய தீர்த்த தளங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்திற்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது . வானத்தில் கருடன் வட்டமிட 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பழமையான இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழாவில் , நடுகோட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள தர்மத்துப்பட்டி, புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கு வந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு முத்தாலம்மனுக்கும், விநாயக பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டது.
Next Story