ராசிபுரம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் தேர் திருவிழா.கொட்டும் மழையில் தேரை இழுத்த பக்தர்கள்..

X

ராசிபுரம் அருகே தண்டுமாரியம்மன் கோவில் தேர் திருவிழா.கொட்டும் மழையில் தேரை இழுத்த பக்தர்கள்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. கோவிலில் வருடம் தோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு மாசி மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,மாசி மாதம் 30 ஆம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழாவானது முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கொட்டும் மழையிலும் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தேர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து பூஜை செய்தனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும்,மேளதாளங்களுக்கு நடனம் ஆடினர்.மேலும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது...
Next Story