நாகர்கோவிலில் டாஸ்மாக்மாரில் வாலிபர் மண்டை உடைப்பு 

நாகர்கோவிலில் டாஸ்மாக்மாரில் வாலிபர் மண்டை உடைப்பு 
X
கன்னியாகுமரி
நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் மதுக்கடை பார் ஒன்று உள்ளது. இந்த பாரில் நேற்று இரவு இரு வாலிபர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். போதையில் இருவருக்கும் மாறி மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அடைந்த ஒருவர் பீர் பாட்டிலால் மற்றொருவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை இரண்டாக பிளந்து ரத்தம் கொட்டியது.       இரத்தம் வெளியேறிய நிலையிலும் அந்த வாலிபர் அங்கு அப்படியே அமர்ந்தார். இதை அடுத்து அவரை தாக்கிய வாலிபர் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த மற்ற குடிமகன்கள் அதிர்ச்சியில் தங்கள் வாங்கி வந்த மதுவை பாட்டில்களை கையில் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.        இது குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம்  சென்று படுகாயம் அடைந்த வாலிபரை . சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் காயமடைந்த வாலிபர் வடசேரி பகுதியை சேர்ந்த ராஜா ( 35) என்பது தெரிய வந்தது. தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 30க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளது. இது குறித்து வடசேரி போரில் சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story