ராமநாதபுரம் ஊராட்சி செயலாளர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் ஊராட்சி செயலர்களின் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் ஊராட்சி செயலாளர்களின் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் ஒரு நாள் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்துமாரி கலந்து கொண்டு பேசினார். அப்போது முறையான காலம் முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் செயலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story