குமரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
நாகர்கோவில்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது.        அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.        இதில் முறையாக காலம்முறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளருக்கு விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும், மேலும் ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Next Story