தமிழ்நாட்டு எம்பிக்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய திமுக தீர்மானம்

அரசியல்
இழிவு படுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய தி.மு.க கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம், பொது உறுப்பினர்கள் கூட்டம் மல்லிப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நா.சாமிக்கண்ணு தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.பழனிவேல், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், தொகுதி பார்வையாளர் சுப.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினர். நிறைவாக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் மைக்கேல் அம்மாள் ஞானப்பிரகாசம், பேராவூரணி பேரூராட்சி துணைத்தலைவர் கி.ரெ.பழனிவேல், தலைமை பொது குழு உறுப்பினர் தனபால், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, பாமா செந்தில்நாதன், முன்னாள் மீனவர் அணி அமைப்பாளர் அபுதாகிர், சிறுபான்மை அணி அமைப்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்தித் திணிப்பை எதிர்ப்போம். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போம், இருமொழி திட்டத்தை ஆதரிப்போம். தமிழ்மொழியைக் காப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. தீர்மானம் வரவுள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஒற்றுமையாக செயல்பட்டு 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது, திமுக கொடியேற்றி, பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்குவது, அன்னதானம் வழங்குவது, மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், தமிழ்நாட்டு எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என்று பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story