கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரம்மோற்சவ விழா நேற்று தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரம்மோற்சவ விழா  நேற்று தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
X
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரம்மோற்சவ விழா நேற்று தீர்த்தவாரி ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
அரியலூர் ,மார்ச்.13- ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இந்த மாசிமக பிரம்மோற்சவ திருவிழாவானது கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 11ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டது. தினசரி சுவாமி வீதி உலா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் 9 ஆம் ஆண்டு மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள சுமார் 40 அடி உயரமுள்ள கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது, 11ஆம் தேதி இன்று ஒன்பதாம் நாள் காலை 6 மணிக்கு திருத்தேர் பவனியும் சுவாமி கோவிலுக்கு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.10 ஆம் நாள் 12 ஆம் தேதி தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் மேலும் கொடி இறக்கமும் சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. விழா தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் யாகசாலை பூஜைகள் மாலை சுவாமி வீதி உலா , நடைபெற்றது. பிரகதீஸ்வரர் வழிபாட்டு குழுமம் சார்பில் அம்பாள் உஸ்சவம், சண்டிகேஸ்வரர் உஸ்சவம், பிரமோற்சவம் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் சார்பில் நடைபெற்றது.இந்த திருக்கல்யாண விழாவில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றுவட்டாரத்தில் இருந்து கிராம பொதுமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு நேற்று விநாயகர், வள்ளி தெய்வானை, பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது. தேர் ஆனது கொடி மர அருகில் இருந்து புறப்பட்டு ராஜவீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நேற்று தீர்த்தவாரி காலை 11 மணி அளவில் நடைபெற்றது.இதில் 10 ஆம் நாள் திருவிழாவாக தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை யாகசாலையில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளை தோளில் சுமந்து சென்று தீர்த்தவாரி குளக்கரையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரியில் புனித நீராடி வழிபாடு செய்தனர். விழாக்களுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் செந்தமிழ் செல்வி தலைமையில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்
Next Story