*கடவூர் ஸ்ரீ கருணகிரி பெருமாள் சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது.*

X

கடவூர் ஸ்ரீ கருணகிரி பெருமாள் சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது.
கடவூர் ஸ்ரீ கருணகிரி பெருமாள் சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. கரூரில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீ கருணகிரி பெருமாள் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று திருத்தேர் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது. அதிகாலை சுவாமி கருணகிர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் தேருக்கு வந்தடைந்தார். அப்போது மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கங்கணம் கட்டி ஆலயத்தின் பட்டாச்சாரியர்க்கு மாலை அணிவித்து மாசி மாத தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் கோவிலை சுற்றி வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது . இந்நிகழ்வில் கடவூர் மற்றும் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆன்மீகப் பெருமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story