அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் சப்பர திருத்தேரோட்டம்
பெரம்பலூரில் மாசி மகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் சப்பர திருத்தேரோட்டம் நடைபெற்றது மாசி மகப் பெருந்திருவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலின் சப்பர திருத்தேர் ஓட்டம் இன்று நடைபெற்றது கடந்த மார்ச் 4 ஆம் தேதிமுதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழா கடந்த 8 நாட்களாக சிம்ம வாகனம்,ஹம்ச வாகனம்,சேஷ வாகனங்களில் சாமி வீதி உலா வந்த நிலையில் 9 ஆம் நாளான இன்று சப்பர திருத்தோரட்டம் நடைபெற்றது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து விழாவை துவக்கி வைத்தனர் விழாவினை கோவில் திருப்பணிக்குழ மற்றும் விழாக்குழவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்த திருத்த ஓட்டத்தினை ஏராளமானோர் வருகை வந்து தெய்வ வழிபாடு செய்தனர்
Next Story




