ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.*

ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.*
X
ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மூன்று மாதங்களுக்கு பிறகு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பரவலாக மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இன்று காலையில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் 11 மணி அளவில் திடீரென மேகம் மூட்டமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையானது நகர் பகுதிகள் மட்டுமின்றி தளவாய்புரம், செட்டியார்பட்டி, சேத்தூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் பரவலாக பெய்தது. மழை நின்ற பின்னும் லேசான சாரல் மழை பெய்து வருவதால் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story