ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
X
ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள கிராம தேவதை ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ள. இந்த ஆலயம் சுமார் 5 ஆண்டுக்கு மேலாக பொதுமக்களின் நிதியளிப்பு மூலம் புனரமைக்கபட்டு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக கொண்டாபட்டது. மேலும் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு யாக சாலை அமைத்து கணபதி ஹோமம் ஸ்ரீ லட்சமி நவகிரக ஹோமம், கோ பூஜை, உள்ளிட்ட ஹோமம் நடந்தேறியது. இதனையடுத்து புனித நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மங்கள இசை தேவபாராயணம் இரண்டாம் கால பூஜை செய்து யாகசாலையில் வைத்து பூஜித்து கோவிலை சுற்றி வீதி உலா வரவழைக்கபட்டு பின்னர் கிராம தேவதை பிடாரி செல்லியம்மன் ராஜ கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கோவிலை சுற்றி கருடன் சுற்றி வலம் வந்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி யடைந்தனர். இறுதியில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிப்பட்டனர்.
Next Story