ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா
X
ஆரணி அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது.
ஆரணி அடுத்த அய்யம்பாளையம் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது. அய்யம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராய பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் வாய்பேசாத குழந்தைகளுக்கு பேசும் சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் சனிக்கிழமை தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிப்பட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி பல்வேறு யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோபுர கலசம் மற்றும் மூலவர் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story