புதிய கட்டடத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

X
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.4.49 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள்; பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 23 பயனாளிகளுக்கு ரூ.22.54 இலட்சம் மதிப்பிலான ஆதிதிராவிட நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படைக்கான இணையவழி பட்டாக்களை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ரூ.4.49 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று துவக்கி வைக்கப்பட்டது. மேலும், இந்த புதிய கட்டடம்; தரைத்தளம் 6921.19 சதுரடி பரப்பளவிலும், முதல்தளம் 6232.30 சதுரடி பரப்பளவிலும் என வட்டாட்சியர் அலுவலக அறை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அறை, கணிப்பொறி அறை, அலுவலக அறை, விசாரணை அறை, கூட்ட அரங்கம், பதிவுகள் வைப்பறை, ரசீது மற்றும் தபால் அனுப்பும் அறை, அலுவலர், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சாய்வுதளம், ஆழ்துழை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்; தெரிவித்தார்.
Next Story

