மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

X
அரியலூர் மார்ச்.13- மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியை முன்னிட்டு, நேற்று அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு நடராஜ பெருமானின் அருளை பெற்றனர். ஒரு வருடத்திற்கு ஆறு முறை இது போன்ற நடராஜருக்கு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதியை முன்னிட்டு மாலையில் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜபெருமானுக்கு திரவிய பொடி, மாவுபொடி, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, தேன், பால், தயிர் உள்ளிட்ட 18 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிவகாமசுந்தரி நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
Next Story

