வீட்டுத் தோட்டம்: ஒருநாள் பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு

வீட்டுத் தோட்டம்: ஒருநாள் பயிற்சி முன்பதிவு செய்ய அழைப்பு
X
வீட்டுத் தோட்டம் அமைப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் முன்பதிவு செய்ய அழைப்பபு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ், சிறுகமணியில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியது: திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஊட்டச்சத்து காய்கறி தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாா்ச் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணமாக நபா் ஒன்றுக்கு ரூ. 590 மட்டும் வசூலிக்கப்படும். மாா்ச் 17-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி நடைபெறும். இதில் பங்குபெற விருப்பம் உள்ளவா்கள் மாா்ச்14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் 91717-17832 என்ற கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தை 0431-2962854, 91717-17832, 90805-40412 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
Next Story