கரிகால சோழீஸ்வரா் கோயில் மாசித் தேரோட்டம்

X
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 3-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாவது நாளான புதன்கிழமை தேரோட்டத்தையொட்டி, சிவகாமி அம்மன், கரிகாலசோழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 10.30 மணியளவில் சுவாமியும், அம்மனும் திருத்தேரில் எழுந்தருளினா். இதையடுத்து, தொடா் மழையிலும் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதையடுத்து, வியாழக்கிழமை காலை தீா்த்தவாரி உற்சவமும், மூலவருக்கு தீபாராதனையும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. பின்னா், இரவில்கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சிவகங்கை தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கௌரவ கண்காணிப்பாளா் கருப்பையா செட்டியாா் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
Next Story