கட்டிட மேற்பார்வையாளர் கொலை வழக்கு தொழிலாளிக்கு ஆயுள் சிறை

கட்டிட மேற்பார்வையாளர் கொலை வழக்கு தொழிலாளிக்கு ஆயுள் சிறை
X
தேவகோட்டையில் கூலி தர மறுத்த கட்டிட மேற்பார்வையாளரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவொற்றியூர் புதுபையூரைச் சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் காளிதாஸ் என்ற சதாசிவம்(37). இவரிடம் தேவகோட்டை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த நாகராஜ்(39) என்பவர் தச்சு வேலை செய்து வந்தார். ஆனால் அதற்குரிய கூலியை காளிதாஸ் தரவில்லையாம். இந்நிலையில் 2016 ஜூன் 3-ம் தேதி காளிதாஸ், தேவகோட்டை பாரத ஸ்டேட் வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ், அவரது சகோதரர் கருப்பையா(42) ஆகிய இருவரும் காளிதாசிடம் கூலித் தொகையை கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சகோதரர்கள், காளிதாஸை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பையா, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே கருப்பையா உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி குற்றம் சாட்டப்பட்ட நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Next Story