விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை

விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை
X
கோரிக்கை
கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில், கோமுகி ஆற்றின் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள சங்கராபுரம், கச்சியராயபாளையம், சின்னசேலம், தியாகதுருகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் இளங்கலை, முதுகலை படித்து வருகின்றனர். இந்த கல்லுாரியில், மாணவர்களுக்கு முறையாக விளையாட்டு பயிற்சி அளிப்பதற்கான மைதானம் இல்லை. அதனால் கல்லுாரி வளாகத்தில் உள்ள காலி இடங்களையே பயிற்சி களமாக பயன்படுத்தி வருகின்றனர்.இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறுகையில், ' கல்லுாரி மாணவர்கள் கபடி, வாலிபால், கால்பந்து, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். முறையான பயிற்சி அளிக்க மைதானம் இல்லாத சூழலிலும் தொடர்ந்து சாதித்து வருகின்றனர். இந்நிலையில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால், மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனைகளை நிகழ்த்துவர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.
Next Story