குத்துச்சண்டை போட்டியில் மாணவர்கள் சாதனை

குத்துச்சண்டை போட்டியில்  மாணவர்கள் சாதனை
X
சாதனை
குத்துச்சண்டை போட்டியில் சங்கராபுரம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் கம்பன் பாக்சிங் அகாடமி சார்பில் 4 வது மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி நடந்தது.இப்போட்டியில் செங்கல்பட்டு,ராணிபேட்டை,சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். குத்துச் சண்டை போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ, மாணவிகள் பல்வேறு எடை பிரிவுகளில் கலந்து கொண்டுமொத்தம் 2 தங்கம்,7 வெள்ளி, 6 வெண்கலம் உள்பட 15 பதக்கங்களை வென்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை பயிற்சியாளர் சூரியமுர்த்தி பாராட்டினார்.
Next Story