ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X

ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் திருமால்வளவன், பொதுக்குழு உறுப்பினர் சிவசூரியன், செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முறையாக காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை அரசு ஒய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும்; ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசு சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி, அரசாணை வெளியிட வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Next Story