திண்டுக்கல் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  சோதனை
X
மார்த்தாண்டம் சார்பதிவாளரின் திண்டுக்கல் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
திண்டுக்கல், வேடசந்துார் கொல்லப்பட்டியை சேர்ந்த சாந்தி 2023ல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சார் பதிவாளராக பணியாற்றியபோது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 2020 முதல் 2023 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சாந்தி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றார். கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் திண்டுக்கல், பழைய கரூர் ரோடு குரு நகர், சீலப்பாடி, கொல்லப்பட்டி பகுதியில் சாந்திக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் சாந்திக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை கோவைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story