ஸ்ரீவாஞ்சியம் ஆலயத்தில் புனித தீர்த்தவாரி நிகழ்வு.

X

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் கோயில் புண்ணியத் தீர்த்தமான குப்தகங்கையில் மாசி மகத்தையொட்டி புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது .
ஸ்ரீவாஞ்சியம் கோயில் புண்ணியத் தீர்த்தமான குப்தகங்கையில் மாசி மகத்தையொட்டி புதன்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது . நன்னிலம் அருகில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயிலில் மாசி மக பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மாசி மக பிரம்மோற்சவ விழாவில், தினசரி ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார் . செவ்வாய்க்கிழமைத் திருத்தேரோட்டம் நடைபெற்றது . ஸ்ரீவாஞ்சியம் கோயில் புண்ணியத் தீர்த்தமான குப்தகங்கையில் கங்காதேவி 999 அம்சங்களுடன் ரகசியமாக உறையும் பெருமைக் கொண்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன . மாசி மக நட்சத்திரத்தில் குப்தகங்கை என்கிற புண்ணிய புஷ்கரணியில் நீராடினால் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபடலாம் என்பதும் ,பிறவிப் பந்தம் அழியும் என்பதும் ஐதீகம். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான மாசி மகத்தையொட்டி காலையில் ஸ்ரீபிட்சானர் வீதி உலா நடைபெற்றது . பின்னர் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர் வீதிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின்னர் ஸ்ரீமங்களாம்பிகை சமேத வாஞ்சிநாத சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி குப்தகங்கையில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது .நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானப் பக்தர்கள் கலந்து கொண்டு நீராடி வழிபட்டனர். இரவு வாஞ்சிநாத சுவாமி வீதி உலா நடைபெற்றது.
Next Story