மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்.

மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்.
X
ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் மனோகர் பாபு உரையாற்றினார்.
ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூர் கீழ வீதியில் திமுக மாவட்ட கழக செயலாளர் பூண்டி. கலைவாணன் தலைமையில் மாபெரும் கண்டன பொது கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தலைமை கழக பேச்சாளர் மனோகர் பாபு உரையாற்றினார் அப்போது அவர் குருகையில்... எந்த மொழிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எதிரானது அல்ல. ஆனால் அதை திணிப்பதை தான் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. மொழி என்பது ஒரு மாநிலத்தின் அடையாளம் அல்ல. அது ஒரு இனத்தின் அடையாளம். இந்த இனத்தை பாதுகாக்க கடிய ஒரே தலைவராக தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் தான் மண்ணில் இருக்கிறார். ஆதிச்சநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஆய்வின்போது 2500 ஆண்டுகள் பழமையான நெல்மணி கிடைத்தது. ஒரு நெல்லுக்கு 2500 ஆண்டுகள் வரலாறு இருக்கிறது என்று சொன்னால் நம்முடைய மொழிக்கு எத்தனை ஆண்டுகால வரலாறு இருக்கும் . தற்போது நடைபெற்ற கும்பமேளாவில் வியாபாரம் செய்ய வந்த பெண்ணை விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அப்போது நம்முடைய முதல்வர் இரும்பின் தொன்மையை இந்த நாட்டுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார். ஐந்தாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இரும்பின் தொன்மை தமிழ்நாட்டில் கிடைத்திருக்கிறது என்று இந்த உலகத்திற்கு இரும்பின் தொன்மையை அடையாளப்படுத்தியுள்ளார். இதை மறைப்பதற்காக தன் இன்றைக்கு மொழி திணிப்பை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்..
Next Story