செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு மேற்கூரை அமைக்க பணிகள் துவக்கி வைப்பு

X

தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் மஸ்தான்
தமிழகத்தில் நெல் வரத்து அதிகம் உள்ள மார்க்கெட் கமிட்டியாக செஞ்சி மார்க்கெட் கமிட்டி உள்ளது. இங்கு போதிய ஏலக்கூடம் இல்லாமல் நெல் மூட்டைகளை திறந்த வெளியில் வைத்து ஏலம் நடத்துகின்றனர். இதனால் மழையின் போது நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது.இது குறித்து விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து தமிழக அரசு 2 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாக்கப்பட்ட ஏலக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கியது. இதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட விற்பனை குழு செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் நெல் அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள், வேளாண்மை விற்பனைக்குழு ஊழியர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், எடை பணி தொழிலாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Next Story