ராணிப்பேட்டையில் கூட்டுறவு பணியாளர் குறைதீர்வு நாள் கூட்டம்!

X

ராணிப்பேட்டையில் கூட்டுறவு பணியாளர் குறைதீர்வு நாள் கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகை சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே பணியாளர் பணி தொடர்பாகவும், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Next Story