சேலம் அருகே இளம்பெண் திடீர் மாயம்

X
சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (25). இவரது மனைவி சந்தியா (21). கடந்த சில நாட்களாக, சந்தியா உடல் நல பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த 9ம் தேதி இரவு, மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து வந்தார். ஆனால், அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய், பல்வேறு இடங்களில் தேடியும் சந்தியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்தியாவை தேடி வருகின்றனர். இதேபோல், கிச்சிபாளையம் அடுத்த சன்னியாசிகுண்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்(47). இவர் அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு, வேலைக்கு சென்ற அவர், பின்னர் திரும்பி வர வில்லை. இதனையடுத்து அவரது மனைவி சுமித்ரா, இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

