தைலாபுரம் விவசாய நிலத்தில் பாசிப்பயிர் மகசூல் போட்டி

X

தைலாபுரம் விவசாய நிலத்தில் பாசிப்பயிர் மகசூல் போட்டி
வானூர் வட்டாரத்தில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வேளாண்மை துறை மூலம் புதிய ரகங்கள் மற்றும் செயல் விளக்கங்கள் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெற தொடர்ந்து பல்வேறு மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான பாசிப்பயிரில் புதிய ரகமான வம்பன்-4 ரகத்தில் பயிர் விளைச்சல் போட்டி நடந்தது.இதில், தைலாபுரத்தைச் சேர்ந்த விவசாயி மலர்மன்னன் வயலில், அறுவடை மேற்கொள்ளப்பட்டது. கடலுார் வேளாண்மை துணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் நடுவர் பிரதிநிதியாக செயல்பட்டார்.இதில் கிடைக்கும் மகசூலின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகசூல் ஒப்பீடு செய்து அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் முன்னிலை வகித்தார்.இந்த பயிர் அறுவடையின் போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ரேகா, பயிர் அறுவடை பரிசோதனையாளர் மகாலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலர் சந்திரசேகர், முன்னோடி விவசாயிகள் அன்பரசன், ஹரிராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story