வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
X
7 நாட்கள் நலப்பணித் திட்ட முகாம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணத் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, வேதாரண்யம் நகராட்சி தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நலப் பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் மாரிமுத்து வரவேற்றார். கல்லூரி முதல்வர் காமராஜ், நாட்டு நலப்பணித் திட்ட பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார். முகாமில், கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியை மேற்கொண்டனர். மனதுர்க்கை அம்மன் ஆலய தூய்மை பணி மற்றும் பள்ளி நூலகம் உள்ளிட்ட இடங்களில் உழவாரப் பணி, ரத்ததான முகாம் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்றன. 7 நாட்கள் நடைபெற்ற முகாமில், போட்டி தேர்வில் எவ்வாறு எதிர்கொள்வது? வாழ்க்கைக்கு தேவையான சட்ட நுணுக்கங்கள், ரத்த தானத்தின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு நாளில், மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் அளித்தனர். நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் குமரேசன் மூர்த்தி பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், இளங்கோவன் இளையராஜா, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நீலமேகம், புயல் குமார் மற்றும் ரோட்டரி சங்கத்தினர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story