சேலத்தில் கோவிலுக்கு சொந்தமான கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு உள்ளதா?

சேலத்தில் கோவிலுக்கு சொந்தமான கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு உள்ளதா?
X
அதிகாரிகள் ஆய்வு
சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. சேலம் டவுன் முதல் அக்ரகாரம் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதை ஏராளமானவர்கள் வாடகைக்கு எடுத்து பல்வேறு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாடகைக்கு எடுத்த பலர் உள் வாடகைக்கு பலருக்கு விட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் புகார் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கடைகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் எத்தனை கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
Next Story