சேலத்தில் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை

X

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
சேலம் அய்யந்திருமாளிகை, மணக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் சரியான முறையில் செயல்படுகிறதா? என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேற்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் மாணவர்களிடம் உணவு தரமாக உள்ளதா? என்று கேட்டறிந்தார். பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் மையத்திற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதை கேட்டறிந்தார். ஆய்வின் போது துணை ஆணையாளர் பாலசுப்பிரமணியன், அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் லட்சுமி, மாநகர நல அலுவலர் முரளிசங்கர், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story