மழையில் மூழ்கிய பருத்தி விவசாயிகள் கோரிக்கை.

மழையில் மூழ்கிய பருத்தி விவசாயிகள் கோரிக்கை.
X
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மூலமாக ஈடுபட்டு வருகின்றனர் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக தற்போது பருத்தி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த பகுதியில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர் தற்போது சம்பா தாளடி அறுவடை பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் நெல்லுக்கு மாற்று பயிர் பருத்தி பச்சபயிர் பயிரிட்டு வந்தனர் இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தேவங்குடி, அரிச்சபுரம் , கானூர் பருத்திக்கோட்டை , வெள்ளக்குடி, சித்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் பயிரிடப்பட்டு வந்த பருத்தி பயிர்கள் முற்றிலும் மழை நீர் தேங்கி முழுமையும் சேதமடைந்துள்ளது பருத்தி பயிரில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் வடிய வைத்து வருகின்றனர் எனவே வேளாண்துறை அதிகாரிகள் தோட்டகலை அதிகாரிகள் முறையாக பாதிக்கப்பட்ட பருத்தி, பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரண வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story