நாகை வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு

நாகை வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு
X
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் குறித்த பயிற்சி
நாகை வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நாகை காளியம்மன் சன்னதியில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வ.முருகன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில், கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து மாணவர்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பது உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சிக்கு, ஆசிரியர் பயிற்றுநர் சி.பிரபு, நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியை ரேகா, அன்னை சத்யா அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சசிகலா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். முடிவில், ஆசிரியர் பயிற்றுநர் சி.பிரபு நன்றி கூறினார்.
Next Story