தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கேரளா சட்டப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

X

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு.கிருஷ்ணன் முன்னிலையில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கும் கேரளாவில் உள்ள மேம்பட்ட சட்டப் படிப்புகளுக்கானத் தேசியப் பல்கலைக்கழகத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் கேரளாவில் உள்ள மேம்பட்ட சட்டப் படிப்புகளுக்கானத் தேசிய பல்கலைக்கழகத்துடன் செவ்வாய்க்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மேம்பட்ட சட்டப்படிப்புகளுக்கானத் தேசியப் பல்கலைக்கழகம் உள்ளது .இப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடுஎ மத்தியப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது .தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகப் பதிவாளர் இரா .திருமுருகன் மற்றும் கேரளா மேம்பட்ட சட்டப்படிப்புகளுக்கானத் தேசியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் லீனா அக்கா மாத்தியூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு பல்கலைக்கழகங்களும் சட்டப் படிப்புகள் மற்றும் சட்ட ஆராய்ச்சியில் முக்கிய கவனம் செலுத்தி, மாணவர்களுக்குக் கூட்டு கருத்தரங்கங்கள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்த உறுதிப்பூண்டுள்ளனர் .புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக நிதி அதிகாரி கிரிதரன், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பேராசிரியர் சுலோசனை சேகர் , பல்கலைக்கழகச் சட்டத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் பேராசிரியர் பால சண்முகம் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story