தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார்
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் கலைஞர் திடலில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரையாற்றினார் திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் கலைஞர் திடலில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் கட்சியினர் முன்னிலையில் உறுதி மொழியை ஏற்று தமிழக முதலமைச்சர் கண்டன உரையாற்றினார் சிறப்பாக கண்டன பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட கழக செயலாளர் எஸ் சந்திரன் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் சிறுபான்மை துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோரை பாராட்டினார் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் வெள்ளி செங்கோலும் வெள்ளி வாழும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் வரிப்பகிர்வில் மாநிலங்களில் நியாயமாக நடந்து கொள்கிறார்களா மாநில அரசை அழைத்து ஆலோசனை ஏதேனும் நடத்தி உள்ளீர்களா மணிப்பூரில் நடந்த விவகாரத்தைபாஜக அரசு என்ன செய்து மாற்றுக் கட்சி மாநில அரசுகளை பழி வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி சொன்னார்கள் ஆனால் பழிவாங்கும் அரசியலை மட்டுமே செய்கிறார்கள் பழிவாங்கும் அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் 2151 கோடி கல்வி நிதி வழங்காமல் பழி வாங்கும் நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என மு க ஸ்டாலின் தெரிவித்தார் தமிழ்நாடு என்பது பிச்சைக்கார மாநிலமா கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதியை மறுக்கிறார்கள் தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல அது காவி கொள்கை இது இந்தியாவை வளர்க்க வேண்டிய கல்வி அல்ல அது இந்தியை வளர்க்கும் கல்வி கொள்கை என்றும் அவர் தெரிவித்தார் மத்திய அமைச்சர் அவர்களிடம் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தெரிவித்து விட்டேன் அதனால் தான் அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது கோபப்படுகிறார் ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்காதீர்கள் நீங்கள் என்ன ஹெட் மாஸ்டர் நாங்கள் ஸ்டூடண்டா வகுப்பு எடுக்க வந்துள்ளீர்கள் நாங்கள் விடமாட்டோம் தமிழ்நாட்டை கொச்சைப்படுத்துவது தான் உங்களின் வழக்கம் ஜெகநாதர் கோவில் கருவூல சாவியை தமிழ்நாட்டிற்கு திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என பேசினார்கள் பிரதமர் உள்துறை அமைச்சரும் அவதூறு பேசினார்கள் தமிழர்களை திருடர்கள் எனக் கூறியதை வாபஸ் பெற வேண்டுமென பாராளுமன்றத்தில் கூறியது கேட்கவில்லை சமஸ்கிருதம் ஹிந்தி திணிப்பு நாகரிகமா அதற்கு நிதி வழங்குவது நாகரிகமாஅநாகரிகத்தின் அடையாளம் நீங்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார் மத்திய அமைச்சரை அரை மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வைத்தார்கள் தமிழக எம்பிக்கள் அதனால் தான் எம்பி உறுப்பினர் எண்ணிக்கை குறைக்க சதி செய்கிறார்கள் மக்கள் தொகை குறைந்தால் நாடாளுமன்ற எண்ணிக்கை குறையும் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் இனி தமிழகத்திற்கு 31 எம்பிகள் தான் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும் மாநில உரிமை பறி போகும் இது தமிழ்நாட்டிற்கான பிரச்சினை மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்குமான பிரச்சனை பாஜக வட இந்தியாவில் அதிக தொகுதிகளை உருவாக்கி வெற்றி பெற நினைக்கிறது என்று அவர் தெரிவித்தார்
Next Story