மாசி மகத்தையொட்டி சுப்பிரமணியசாமிக்கு அன்னாபிஷேகம்

மாசி மகத்தையொட்டி சுப்பிரமணியசாமிக்கு அன்னாபிஷேகம்
X
தாராபுரத்தில் மாசி மகத்தையொட்டி சுப்பிரமணியசாமிக்கு அன்னாபிஷேகம்
தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒன்றாக இணைந்து வரும் சிறப்பு மிக்க இந்நாளில் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. முருகப்பெருமானுக்கு அன்ன தானத்திலேயே அபிஷேகம் செய்து கனி வகைகள், காய் கறிகள், பூக்கள் போன்றவற்றை கொண்டு அன்னதானத்தில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story