மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

X

தர்மபுரி மாவட்டம்த்தில் மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு. ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,மினி பஸ்களுக்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் பொருளாதார, முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இந்த திட்டம் வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தின்படி, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி.மீ ஆகும். அதில் சேவை செய்கிறார்கள். பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் குறைந்தபட்சம் 65 சதவீதத் திற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்க புள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ, கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பஸ் நிறுத்தமாகவோ அல்லது பஸ்நிலையமாகவோ இருக்கலாம். தர்மபுரி மாவட்டத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் இதுவரை 38 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தர்மபுரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க காலக்கெடு நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மினி பஸ்களை இயக்க புதிதாக வழித்தடங்கள் கண்டறியப்பட்டால் உரிய வழித்தட வரைப்படங்களுடன் தர்மபுரி வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Next Story