அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற காங்கேயம் நகராட்சி தலைவர்

X

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் வாழ்த்து பெற்ற காங்கேயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ்
காங்கேயம் நகராட்சி தலைவராக சூர்யபிரகாஷ் உள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்சியில் இருந்து கொண்டு தனித்து செயல்பட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தலைமை கழகத்தில் விளக்க கடிதம் அளித்ததின் அடிப்படையில் மீண்டும் இவர் மீது இருந்த நடவடிக்கை நீக்கப்பட்டு கட்சியில் இணைக்கப்பட்டார். தொடர்ந்து மரியாதை நிமித்தமாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்.
Next Story