போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள் : இரண்டு இளைஞர்கள் கைது

போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள் : இரண்டு இளைஞர்கள் கைது
X
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள் : இரண்டு இளைஞர்கள் கைது
போதைக்கு பயன்படுத்த வலி நிவாரண மாத்திரைகள் : இரண்டு இளைஞர்கள் கைது 1800 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை மதுரவாயலில் போதைக்காக வைத்திருந்த 1800 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய் போலீசார் இரண்டு இளைஞர்களை கைது செய்தனர் பூந்தமல்லி அருகே, மதுரவாயல் சுற்று வட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் போதை அடைவதாகவும், மற்ற இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரவாயல் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை அருகே சோதனை செய்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை பரிசோதனை செய்ததில் 1800 வலி நிவாரண மாத்திரைகள் சிக்கின. அந்த மாத்திரைகளை அவர்கள் போதைக்காக பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (24) மற்றும் கார்த்திகேயன் (24) என தெரிய வந்தது. அத்துடன் சஞ்சய் மீது ஆர் வழக்குகளும் கார்த்திகேயன் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன. இதைத்தொடர்ந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.
Next Story