குமரி கலெக்டர் கையெழுத்துடன் பணம் வசூல் - கைது

குமரி கலெக்டர் கையெழுத்துடன் பணம் வசூல் - கைது
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டதில் உள்ள பள்ளிகளில் விழிப்புணர்வு குறும்படம் போட்டு மாணவர்களுக்கு காண்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு தந்திருப்பதாக  தெரிவித்து மாவட்ட ஆட்சியரின் போலியான கையொப்பமிட்டும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியின் சீலையும் கையெழுத்தையும் தவறாக பயன்படுத்தியதாக நேசமணி நகர்  போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் அனைத்து பள்ளிகளுக்கும் போலி லெட்டரை அனுப்பி மாணவர்களிடம் இருந்து ரூபாய் 10 வீதம் வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு போலீஸாரால் தேடப்பட்டு வந்த  குற்றவாளிகளில் ஒருவரான சரவணகுமார் என்பவரை  நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.        கைது செய்யப்பட்ட  நபரிடம் மாவட்ட ஆட்சியரின் போலியான கையெழுத்துடன் கூடிய லெட்டரை தயார் செய்து  பத்து ரூபாய் முறை கேட்டில் யார் யார்?  சம்பந்தப்பட்டுள்ளனர் , எத்தனை பேருக்கு இதில் தொடர்பு உள்ளது. போலியான ஆவணம் மற்றும் சீல்  எங்கு தயார் செய்யப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.        மேலும் சரவணகுமார் கூறுகையில்  அவர் கலெக்டர் கையொப்பம் இருந்ததால் பணம் வசூலித்ததாகவும், இதில் சென்னையில் இருந்து சிலர் தொடர்பு கொண்டதாகவும் கூறினார். சரவணகுமார் மாற்றுத்திறனாளி ஆவார்.
Next Story