மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது
X
திருப்பாச்சேத்தி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர் திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் ராஜதுரை(35) இவருக்கும், தமிழ்ச்செல்வி(28)க்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன், குடும்ப தகராறு காரணமாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நாராயணதேவன்பட்டியில் உள்ள தாய் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று மது போதையில் சென்ற ராஜதுரை தகராறில் ஈடுபட்டு தாக்கியதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி(28) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வி(28) கொடுத்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த மானாமதுரை போலீசார் ராஜதுரை(38)யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story