காரமடை: அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம் !

காரமடை:  அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம் !
X
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாதர் பெருமாள் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாதர் பெருமாள் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணிக்கு கொட்டும் மழையில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், காரமடை நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்னராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ரங்கா... கோவிந்தா... கோஷம் விண்ணை அதிரச் செய்தது. தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து இரவு தேர் நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதிமுக நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி தலைமையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story