மனைவி திட்டியதால் இளைஞர் விபரீத முடிவு

மனைவி திட்டியதால் இளைஞர் விபரீத முடிவு
X
திருப்புவனம் அருகே மனைவி கண்டித்ததால் மனம் உடைந்து இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(36). இவருக்கு அதிகமான மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது இந்நிலையில் மனம் உடைந்த லட்சுமணன்(36) நேற்று(மார்.12) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டியம்மாள்(31) கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story