போலீசிடம் ஒப்படைப்பு

போலீசிடம் ஒப்படைப்பு
X
சாலையில் கண்டெடுத்த 1 பவுன் தங்க நகையை போலீசிடம் ஒப்படைத்த சுமை தூக்கும் தொழிலாளி
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி பிரபா. நேற்று இரவு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரபா தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டி முன்பாக மணிபர்சில் தங்க செயின் மோதிரம் என ஒன்னேகால் பவுன் தங்கச் செயினை வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால் ஸ்கூட்டியை வேகமாக இயக்கியுள்ளார். அப்போது ஸ்கூட்டியில் இருந்து மணி பர்ஸ் தவறி கீழே விழுந்து விடுகிறது. இதை கவனிக்காமல் பிரபா வேகமாக திருமண வீட்டுக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தபோது மணி பர்ஸ் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தான் வந்த பாதையில் தேடிப் பார்த்தார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு வைரா பாளையம் பகுதியில் சுமைதுக்கும் தொழிலாளி செல்வம் என்பவர் சுமை இருக்கும் வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு கடந்த மணி பர்சை எடுத்துப் பார்த்தார். அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு உடனடியாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். மழை பெய்வதால் காலை வந்து போலீஸ் நிலையத்தில் நகையை தந்து விடுவதாக கூறினார். அப்போது போலீசார் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் வந்து நகையை கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதனை அடுத்து இன்று காலை சுமை தூக்கும் தொழிலாளி செல்வம் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வந்து ஏடிஎஸ்பி விவேகானந்தனிடம் நகையை ஒப்படைத்தார். அவரது நேர்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து போலீசார் பாராட்டினர். பின்னர் பிரபாவிடம் இது குறித்து தகவல் தெரிவித்து அவரை வரவழைத்து அவரிடம் நகையை போலீசார் ஒப்படைத்தனர்.
Next Story