ராமநாதபுரம் புதிய சத்துணவு கட்டிடம் திறப்பு

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாவிலா தோப்பு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தை திறந்து வைக்க ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வருகை தந்தார் அவரை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு செல்வம் மற்றும் ஊர் தலைவர் செல்வம் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர் அப்போது அருகே நின்று கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவி சாஷ்நியாவை அழைத்து சத்துணவு கூடத்தை திறந்து வைக்க சொன்னார் இதனால் மாணவி சந்தோசமாக திறந்து வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,தில்லை சீமை ரகுமான். கல்யாணசுந்தரம் ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருத்த முத்து திமுக கிருஷ்ணமூர்த்தி திமுக கிளை அவைத்தலைவர் நடராஜன் ராமர் லட்சுமணன் மாவிலா தோப்பு கிராம பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடைகளை வழங்கி கௌரவித்தார்
Next Story

