மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
X
மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வரியினங்களை காலதாமதமின்றி செலுத்த வேண்டும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணத்தினை காலதாமதமின்றி செலுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொது மக்களும் வரும் 31க்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். எனவே, அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் காலம் தாழ்த்தாமல் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயோ, வரி வசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப்பணியாளர்களிடமோ “POS MACHINE” மூலமாகவோ அல்லது வீட்டுவரி இணையதளம் https://vptax.tnrd.gov.in என்கிற VP Tax Online Portal மூலமாகவோ UPI (PayTM, Gpay, Phonepe), பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலம் வரி தொகை செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கையும், தண்ணீர் வரி செலுத்தாதவர்களின் வீட்டுக் குடிநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ராஜகோபால் சுன்கரா குறிப்பிட்டுள்ளார்.
Next Story