கோயில் விழா

கோயில் விழா
X
அரங்கநாதர் கோயிலில் லட்சார்ச்சனை விழா
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கமலவல்லித் தாயாருக்கு லட்சார்ச்சனை விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. இதனையொட்டி, காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு கமலவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம், 7 மணிக்கு, தேவதா அனுக்ஞை, விஷ்வக்ஸேந ஆராதனம், வாசுதேவ புண்யாகவஜனை, மகாலட்சுமி ஹோமம், 9.30 மணிக்கு சாற்றுமறை, தீபாரதனை, 10 மணிக்கு முதல்கால லட்சார்ச்சனை ஆரம்பம், 12 மணிக்கு முதல்கால லட்சார்ச்சனை பூர்த்தி நடைபெற்றது. திரளான பக்தர்கள் அரங்கநாதரை தரிசித்தனர்.
Next Story