ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீரமச்சன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய வீட்டு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்தம்மாள் ஆலய நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா விமர்சையாக நடைபெற்றது முன்னதாக யாகசாலை பூஜையை கணபதி ஹோமம் கோமாதா பூஜை பூர்ணா குதி கோமாதா பூஜை தீபாரணை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன் யாக வேள்வியிலிருந்து கடம்பரப்பாடு ஆகி ஆலயம் சுற்றி வலம் சென்று விமான கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் முத்தம்மாள் சுவாமிக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது இதில் கமுதி பெருநாழி சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீரமச்சன்பட்டி பெரிய வீட்டு பங்காளிகள் நிர்வாகிகள் செய்தனர்
Next Story



