வென்னிமலை முருகன் கோயிலில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது

வென்னிமலை முருகன் கோயிலில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது
X
முருகன் கோயிலில் பால்குடம் வீதி உலா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வென்னிமலை முருகன் கோயில் பத்தாம் நாள் திருவிழா இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு இன்று காலையில் கீழப்பாவூர் பொதுமக்கள் சார்பாக வேல்குத்தி பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன் பால்குடம் வீதி உலா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து அருள்மிகு வென்னிமலை முருகன் கோவிலிலில் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story