ராமநாதபுரம் நாய்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள குளத்து கரையில் மண்ணுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்களை ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர். ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள சிவன் கோயில் குளத்துக்கரையில் இன்று காலை நடை பயிற்சிக்காக சென்ற பொதுமக்கள் மண்ணுக்கு அடியில் நான்கு நாய்கள் சிக்கிக் கொண்டு தலை மட்டும் வெளியே தெரிந்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டுள்ளனர். இதனை எடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கி இருந்த ஒரு தாய் நாயையும் அதன் நான்கு குட்டியையும் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டு வெளியே எடுத்து வந்தனர் இதில் தாய் நாயும் மூன்று நாய்க்குட்டிகளும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்களை விரைந்து வந்து பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்
Next Story




